தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்னிப்பு கோரியுள்ள பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்


உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து
கட்டுப்பணத்தை பெற வேண்டாம் என தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம்
அறிவித்தமைக்காக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னே
தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

குறித்த கடிதம் தொடர்பாக, நேற்று தேர்தல்கள் ஆணைக்குழு முன்னிலையில்
அழைக்கப்பட்ட போதே அவர் மன்னிப்பு கோரியதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்
சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்னிப்பு கோரியுள்ள பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் | Public Admin Ministry Secy Apologises To Ec

அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவே தாம் கடிதம் வழங்கியதாகவும், தேர்தல்கள்
ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தலையிடும் நோக்கம் தமக்கு இல்லை எனவும்
தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஹபுஹின்னே
தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.