சென்னை: திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி: “திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.”
உள்துறை அமைச்சர் அமித் ஷா: “திருவள்ளுவர் போதித்த தெய்வீக ஞானமும் வாழ்க்கைப் பாடமும் பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் தெய்வ பக்தியுடன் கூடிய வாழ்க்கைப் பாதையைக் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார். இளைஞர்களிடையே, திருவள்ளுவரின் நூல்களை படிக்கும் ஆர்வத்தை நாடு தழுவிய அளவில் இந்த நாள் தூண்டட்டும்.”