வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பா.ஜ.,தேசிய செயற்குழு இன்று டில்லியில் கட்சி தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் கூடியது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி பேரணியாக சென்று செயற்குழுவில் பங்கேற்க உள்ளார். இதற்கென பா.ஜ., தரப்பில் தடல் புடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்னும் சற்றுநேரத்தில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பிரதமர் மோடி செல்ல உள்ளார்.

வீதிகள் முழுவதும் பல்வேறு இசை கலைஞர்கள் ஆங்காங்கே இசைத்தப்படி உள்ளனர். தொண்டர்கள் பிரதமர் மோடியை வரவேற்க திரளாக கூடியுள்ளனர்.

வரும் 20024 ல் பார்லி., தேர்தல் மற்றும் கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா, நாகலாந்து, மேகாலயா, மிசோரம், மத்தியபிரதேசம், தெலுங்கானா, உள்ளிட்ட 9 மாநில சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் வேளையில் இது தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
மேலும் ஜி-20 மாநாடு நடத்துதல், இந்திய பொருளாதாரம், வெளிநாட்டு கொள்கையில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்தும் ஆராயப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement