கர்நாடகா: பெங்களூருவில் கார் ஓட்டுநரை இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரை மோதிவிட்டு தப்ப முயன்ற இளைஞரின் இருசக்கர வாகனத்தை பிடித்து நிறுத்த ஓட்டுநர் முத்தப்ப முயற்சி செய்துள்ளார். வாகனத்தை நிறுத்தாமல் இழுத்த சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் சிலர் இளைஞர் சென்ற இருசக்கர வாகனத்தை வழிமறித்து முத்தப்பாவை மீட்டனர்.
