“வாட்சுக்கு தேசப்பற்று என்றவர் ‘சுதந்திரக் காற்று’ என உருட்டாமல் இருந்தால் சரி!” – செந்தில் பாலாஜி சூசகம்

சென்னை: “வாட்சுக்கு தேசப்பற்று என்று கூறியவர், சுதந்திரக் காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சூசகமாக தெரிவித்துள்ளார்.

மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த டிசம்பர் 29-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் தொடர்பாக சூசகமகா பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “கடந்த 10-ம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும்போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.

விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள். விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது. மன்னிப்புக் கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை?” என்று தெரிவித்து இருந்தார்.


— V.Senthilbalaji (@V_Senthilbalaji) December 29, 2022

இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில், இது தொடர்பாக இன்று (ஜன.17) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் Emergency கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.