சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ ஃபான்டம் எக்ஸ்2 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் ஃபான்டம் எக்ஸ்2 மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருந்தது.
சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017 வாக்கில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்நிலையில், டெக்னோ நிறுவனம் ஃபான்டம் எக்ஸ்2 புரோ என்ற ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. வெகு விரைவில் இந்த போன் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
சிறப்பு அம்சங்கள்
- 6.8 இன்ச் ஹெச்.டி கர்வ்டு AMOLED டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்
- மீடியாடெக் டிமான்சிட்டி 9000 சிப்செட்
- 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்
- இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும் என தெரிகிறது
- டைப் சி யூஎஸ்பி
- 45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
- 5160mAh பேட்டரி
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா. Retractable lens கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவும் இடம் பெற்றுள்ளது
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- வரும் 24-ம் தேதி முதல் இந்த போன் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- இதன் விலை ரூ.49,999
Delivering efficiency of the highest level, like @raltejeremy
Experience #BeyondTheExtraordinary with World’s 1st TSMC 4nm 5G Processor for everything faster and smoother. pic.twitter.com/wrANOffkzs
— TECNO Mobile India (@TecnoMobileInd) January 18, 2023