கிராமங்களைவிட நகரங்களில் உள்ளவர்களுக்கு மூலநோய் அதிகளவில் வருகிறது. ஆசனவாயில் வலியற்ற ரத்தப்போக்கு, அரிப்பு, எரிச்சல், வீக்கம் மற்றும் வலி போன்றவை மூலநோய்க்கான அறிகுறிகள்.
மூலம் ஏற்பட காரணம்?
ஆசனவாயில் உள்ள ரத்த நாளத்தில் அழுத்தம் ஏற்படுவதால் மூலம் ஏற்படுகிறது. இதற்கு அடிப்படைக் காரணங்களாவன:
மலச்சிக்கல், நீண்ட நேரம் கழிவறையில் உட்கார்ந்து இருத்தல், குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு உண்ணுதல், உடல்பருமன், நீண்ட நாள் வயிற்றுப்போக்கு, கர்ப்ப காலம், கல்லீரல் அழற்சி நோய்(Cirrhosis) மற்றும் மலக்குடல் புற்றுநோய் போன்ற காரணங்களால் மூலநோய் ஏற்படலாம். மேலும், பரம்பரைக் காரணங்களாலும் மூலம் ஏற்படலாம்.
மூலத்தின் நிலைகள்:
மூலத்தை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1.முதல் நிலையில் ரத்தப்போக்கு இருக்கும். சதை வெளித்தள்ளாது. வலி இருக்காது. 2.இரண்டாம் நிலையில் மூலம் வெளியே வந்து தானாகவே உள்ளே சென்று விடும்.
3.மூன்றாம் நிலையில் வெளியே வரும் மூலத்தை கையால் உள்ளே தள்ள முடியும்.
4. நான்காம் நிலையில் மூலம் ஆசனவாய்க்கு கீழே தள்ளிய நிலையிலேயே இருக்கும் (Prolapsed Piles).
பரிசோதனை முறைகள்:
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ரத்தப் பரிசோதனை, ப்ராக்டோஸ்கோபி (Proctoscopy), சிக்மாய்டாஸ்கோபி (Sigmoidoscopy) மற்றும் கொலனாஸ்கோபி (Colonoscopy) போன்ற பரிசோதனைகளில் உங்களுக்குரிய பரிசோதனையை நீங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கலாம்.
மூலத்தின் நிலைகளுக்கேற்ப சிகிச்சைகள்:
முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை மூலம் உள்ளவர்கள் மலச்சிக்கலைக் தவிர்க்க வேண்டும், அதிக நார்சத்து உள்ள உணவுகளை (காய்கறிகள், பழங்கள் மற்றும் கோதுமை) அதிகமாகவும், மாவுச்சத்து உள்ள உணவுகளை குறைவாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் அதிகளவு தண்ணீர் உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கலை தவிர்க்கலாம். மலமிளக்கிகளை(Laxatives) எடுத்துக்கொள்வதன்மூலம் மலச்சிக்கலை தடுக்கலாம்.
வீங்கி முடிச்சு போல் உள்ள ரத்தக் குழாய்களை ஸ்க்லெரோதெரபி (Sclerotherapy) அல்லது லேசர் சிகிச்சை மூலம் சுருங்கச் செய்யலாம்.
மூன்றாம் மற்றும் நான்காம் நிலை மூலத்தை மருந்தால் குணப்படுத்த முடியாது. அறுவை சிகிச்சை மூலமாகவும், லேசர் மூலமாகவும் மற்றும் அதிநவீன ஸ்டாப்ளர்(Stapler) சிகிச்சை மூலமாகவும் மட்டுமே குணப்படுத்த முடியும்.
லேசர் சிகிச்சையின் சிறப்பு:
லேசர் மூலமாக எல்லா நிலை மூலத்தையும் குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலை மூலத்திற்கு (முதல் மற்றும் இரண்டாம் நிலை) லேசர் கதிரை மூலத்தின் மேல் செலுத்தி, உள்ளிருக்கும் ரத்தத்தை உறையச் செய்வதே சிறந்த சிகிச்சை முறையாகும். முற்றிய நிலை மூலத்தை (மூன்றாம் மற்றும் நான்காம் நிலை) லேசர் சிகிச்சை மூலம் சிகிச்சை செய்வதால், ரத்த இழப்பு இருக்காது. வலி மிகக் குறைவாகவே இருக்கும். மருத்துவமனையில் ஒரு நாள் மட்டும் இருந்தால் போதுமானது. விரைவில் பழைய நிலைக்கு திரும்பி நாம் அன்றாட வேலைகளை கவனிக்கலாம்.
ஸ்டாப்ளர் (STAPLER) சிகிச்சையின் சிறப்பம்சங்கள்:
மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் ஸ்டாப்ளர் போன்று அல்லாமல், மூலத்திற்காகவே, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன கருவிதான் PPHO3 எனப்படும் ஹெமராய்டால் ஸ்டாப்ளர் (Haemorrhoidal Stapler) ஆகும். இந்த கருவியைக் கொண்டு ஆசனவாயின் உள்பகுதியில் மூலத்துடன் கூடிய சதையை எடுத்த பிறகு அந்த இடத்தை ‘ஸ்டாப்ளர் பின்’னால் இணைப்பதுதான் இந்த சிகிச்சையின் சிறப்பம்சமாகும். இந்த சிகிச்சையின்போது ஆசனவாய்க்கு மேலுள்ள தசைகளை அதிகம் கிழிக்காமல் வேண்டிய அளவு மட்டுமே கிழிப்பதால், மலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் சக்தி ஆசனவாய்க்கு அப்படியே இருக்கும்.
ஸ்டாப்ளர் சிகிச்சையின் சாதகங்கள்:
-
ரத்த இழப்பு இருக்காது. வலியோ மிக மிகக்குறைவு.
-
ஒரு நாள் மட்டுமே மருத்துவமனையில் இருந்தால் போதும்.
-
உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி அன்றாட வேலைகளைச் செய்யலாம்.
-
சிகிச்சைக்கு பிறகு Dressing, SITZ Bath மற்றும் நீண்ட நாட்களுக்கு மருந்து மாத்திரைகள் தேவையில்லை.
எனவே இதனை மூலநோய்க்கான மிக நவீன சிகிச்சை முறை என்றே சொல்லலாம்.

20 ஆயிரம்+ பேருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்:
-
சென்னையில் பிரபலமான வயிறு மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் R. கண்ணன் அவர்கள் குடல் இறக்கம் (FALS HERNIA), கல்லீரல் மற்றும் கணைய அறுவை சிகிச்சை (FALS HPB), இரைப்பை, உணவுக்குழாய் சம்பந்தமான அறுவை சிகிச்சை (FALS UGI), மலக்குடல் மற்றும் பெருங்குடல் சம்பந்தமான அறுவை சிகிச்சை (FALS COLORECTAL) மற்றும் உணவுப் பாதையில் ஏற்படும் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை (FALS ONCOLOGY) போன்ற பல துறைகளில் பட்டம்பெற்ற முதல் இந்திய மருத்துவர் என்ற பெருமைக்குரியவர்.
-
மூலம், பவுத்திரம் போன்ற ஆசனவாய் சம்பந்தமான பிரச்னைகளுக்கு லேசர் மூலமாக (20000 மேற்பட்டவர்களுக்கு) சிகிச்சை (Minimally Invasive Laser Proctology) அளித்து வருபவர்களில் இந்திய அளவில் மிகவும் முக்கியமானவர் டாக்டர் R. கண்ணன்.
-
எண்டோஸ்கோப்பி, பெருங்குடல் உள்நோக்கு பிரிவுகளில் (FIAGES, E-FIAGES) பட்டங்களைப் பெற்றவர்.
-
கிராமம் மற்றும் நகரந்தோறும் பல இலவச மருத்துவ முகாம்களை நடத்தி மருத்துவ சேவையை தொடர்ந்து அளித்து வருகிறார். ‘மக்களுடன் மருத்துவம்’ என்னும் நிகழ்ச்சி மூலம் மருத்துவம் சம்பந்தமான சந்தேகங்களை தெளிவு படுத்தி வருகிறார். தொண்டு நிறுவனங்களிடமிருந்து மருத்துவ சேவைக்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.
Dr. R. கண்ணன்
MS, DNB (SGE)., FACS (USA). FICS, FAIS.,
FMAS., FIAGES., FACRSIL, DMAS(France).,
E-FIAGES., FALS (UGI), FALS (HPB), FALS (Colorectal), FALS (Hernia), FALS (Onco)
தொடர்புக்கு:
பிரைம் இண்டியன் ஹாஸ்பிடல்ஸ்,
ந.1051, பூந்தமல்லி ஹைரோடு,
அரும்பாக்கம், சென்னை – 600 116.
போன்: 044 2363 9999 / 98844 93140
ஈமெயில்: [email protected]
வலைத்தள முகவரி: www.primeindianhospitals.com | www.proctocare.net