Jallikattu 2023: அனுமதி இன்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு: 58 பேர் படுகாயம்

கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சியில் காணும் பொங்கல் பண்டிகையான நேற்று அந்த பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடி வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு போட்டியை அனுமதியின்றி நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. இது குறித்து தகவல் அறிந்ததும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன், கூடமலைக்கு சென்று ஜல்லிக்கட்டு போட்டி அனுமதி இல்லாமல் நடைபெற்றதை அடுத்து உடனடியாக அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினார்.

அனைத்து மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் கலைந்து சென்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

26 பார்வையாளர்களுக்கு காயம்
தம்மம்பட்டி கல்லூரி மாணவன் சந்துரு (20) உலிபுரத்தைச் சேர்ந்த கலியபெருமாள் (65) ஆனந்த் (32)ரவி (30)பிரபு உள்ளிட்ட ஐந்து பேரும் பலத்தக்காயம் ஏற்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு மேலும் 21 பார்வையாளர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் தம்மம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அதேபோல் செந்தாரப்பட்டி பேரூராட்சியில் இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு அனுமதி இன்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்ததில் 32 பேருக்கு காயம் ஏற்பட்டு அதில் செந்தாரப்பட்டி ராமச்சந்திரன் (65) நடராஜன் (47) கூலமேடு காசி (43) லோகேஷ் (16)ஆகிய நான்கு ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 28 பேருக்கு லேசான காயத்துடன் முதலுதவி பெற்று வீடு திரும்பினார்.

இதனையடுத்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தாரப்பட்டி ராமச்சந்திரன் (65) தம்மம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவன் சந்துரு ஆகிய இருவரையும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல் அரசு அனுமதி இன்றி ஜல்லிக்கட்டு நடைபெற்ற சம்பவத்தில் தம்மம்பட்டி செந்தாரப்பட்டி ஆகிய பகுதியில் மொத்தம் 58 பார்வையாளர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியவர்களை கண்டு கொள்ளாத காவல்துறையின் அலட்சியமாக செயல்பட்டதால் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர், மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுகளில் பரபரப்பாக காணப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.