செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சீர்திருத்தப்பள்ளி காவலர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சிறுவனின் தாய் ப்ரியா, சிபிசிஐடி விசாரணை கோரி யிருந்தார்.
இந்நிலையில் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய பதிவாளர் அனு சௌத்ரி நேரடியாக ஆய்வு மேற்கொண்டு கொலை தொடர்பாக விசாரணை நடத்தினார்.
பல மணி நேரமாக நீடித்த இந்த விசாரணையின் போது செங்கல்பட்டு மாவட்ட கோட்டாட்சியர் சஜீவனா மற்றும் டிஎஸ்பி பாரத் ஆகியோர் உடனிருந்தனர்.