பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாவலூர் எனும் கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கின்றது. இந்த கோவிலுக்கு அருகே வைத்திருந்த ஆம்ப்ளிஃபையர் மற்றும் மைக் செட் என்று காலை நேரத்தில் காணாமல் போயுள்ளது.
இந்த தகவலை அறிந்த கிராம மக்கள் அதே பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் திருடிய இரண்டு நபர்களில் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது.
மற்றொருவர் சுரேஷின் நண்பர் சந்துரு என்பதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரையும் பிடித்த ஊர் பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
காவல் துறையினர் சந்துரு மற்றும் சுரேஷ் இருவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மைக்செட்டை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.