கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் காட்டு யானைகள்! புலம்பெயர்கிறதா?

கூட்டம் கூட்டமாக தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் காட்டு யானைகளின் நலனை கவனத்தில் கொண்டு, அவ்வழியாக வாகனத்தில் செல்வோர் 30 கிமீ வேகத்தில் வாகனத்தை இயக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே பகல் நேரத்தில் சாலையோரம் கூட்டமாக நடமாடிய காட்டு யானைகள் குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றன.
image
இவை காண்பதற்கு யானைகள் அக்காட்டிலிருந்து வெளியே செல்ல முயல்கின்றதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அதை அறியும் முன்னர் அவற்றின் நலனில் அக்கறை கொண்டு அதிகாரிகள் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். குறிப்பாக, யானைகளுக்கு வாகன ஓட்டிகளோ வாகனங்களோ அச்சுறுத்தலாகிவிடவோ துன்புறுத்தியோவிடக்கூடாது மற்றும் யானைகள் வாகனங்கள் – வாகன ஓட்டிகளை தாக்கிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 
அதன்படி அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக செல்லுமாறும், தேசிய புலிகள் காப்பக விதிகளின்படி வாகனங்கள் 30 கிமீ வேகத்தில் மட்டுமே இயக்கவுமென்றும் வனத் துறையிர் அறிவுறுத்தியுள்ளனர். சமீபகாலமாகவே பகல் நேரங்களில் சாலையோரம் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வாகன ஓட்டிகளின் வேகம் வனத்துறையால் கண்காணிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.