துபாய் ரூம் சீக்ரெட் சொல்லு மாமி… வறுத்தெடுக்கும் திருச்சி சூர்யா… மோசமா போகுது…

தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகியுள்ள காயத்ரி ரகுராமுக்கும், திருச்சி சூர்யா சிவாவுக்கும் கருத்து மோதல் இருந்து வருகிறது. அண்ணாமலை குறித்து நாகரீகமான முறையில் காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்து வர, திருச்சி சூர்யா சிவா தனது வழக்கமான பாணியில் சர்ச்சையாக பதிலடி கொடுத்து வருகிறார். இதனால் ட்விட்டர் பக்கம் அனல் பறந்து வருகிறது.

தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை வந்த பிறகு வார்ரூம் அமைத்து ஹனிட்ராப் மூலம் பணம் மோசடி செய்யும் கட்சியாக பாஜக மாறிவிட்டது என்று காயத்ரி ரகுராம் கூறியிருந்தார். அதற்கு எதிர்வினையாற்றிய திருச்சி சூர்யா சிவா, உனக்கு வார்ரும் நாளும் பிரச்சனை துபாய் ரூம் நாளும் பிரச்சனை. வார்ரும் பத்தி இவ்வளவு அழகா சொல்றியே அப்படியே அந்த துபாய் ரூம் பத்தி தெளிவா சொன்னா தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறோம் மாமி” என்று கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.

துபாய் ரூம் விவகாரம் நடிகை காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்தபோதே பயங்கரமாக வெடித்தது. சில நாட்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தது. இக்கூட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். அங்கு பேசிய அண்ணாமலை, ” திராவிட கட்சிக்காரர்களே பயப்படும் அளவுக்கு நம் நிர்வாகிகள் மீது பாலியல் குற்றசாட்டுகள் பரபரப்பாக எழுகிறது. ஒழுக்கக் கேடானவர்களுக்கு பாஜகவில் இனி இடம் கிடையாது. எனக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துவிடாதீர்கள்.

கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரும் என்ன செய்கிறீர்கள் என்று தெரியும். எனக்கு எதிராக ட்வீட் போட்டு வரும் பெண்மணி துபாய்க்கு எதற்காக சென்றார்; எங்கு தங்கினார்; எந்த திமுக பிரமுகரை சந்தித்தார் என்று எனக்கு தெரியும். அனைத்து ஆதாரமும் என்னிடம் உள்ளது. நமது மாவட்ட தலைவர்கள் பலர் திமுகவினரிடம் கொஞ்சு குலாவி வருகின்றனர்” என்று எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த காயத்ரி ரகுராம், ஒருவரது அந்தரங்கத்தை 150 நிர்வாகிகளுக்கு முன்பு எப்படி அண்ணாமலை சொல்லலாம் என்று போர்க்கொடி தூக்கினார். அதன் பிறகு கட்சியில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.

இருப்பினும், காயத்ரி ரகுராம் பாஜக நிகழ்ச்சிக்காக துபாய் சென்று, திமுக நிர்வாகியுடன் ஹோட்டலில் தங்கியதாக குற்றசாட்டுகள் வைக்கப்பட்டன. அதனாலேயே அவரை கட்சியில் இருந்து ஓரம் கட்டியதாக பாஜக வட்டாரம் சொல்கிறது. இந்த நிலையில், அண்ணாமலையை விமர்சித்து வரும் காயத்ரி ரகுராமை துபாய் விஷயத்தை வைத்து திருச்சி சூர்யா சிவா பதிலடி கொடுத்துள்ளார்.

அவரது ட்வீட்டில், உனக்கு வார்ரும் நாளும் பிரச்சனை, துபாய் ரூம் நாளும் பிரச்சினை. வார்ரும் பத்தி இவ்வளவு அழகா சொல்றியே அப்படியே அந்த துபாய் ரூம் பத்தி தெளிவா சொன்னா தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறோம் மாமி என்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.