கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் அதே பெயரில் படமாக உருவாகியது. மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீசான‘பொன்னியின் செல்வன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்தனர். விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், ஜெயம் ரவி அருண்மொழிவர்மனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா நந்தினியாகவும், த்ரிஷா குந்தவையாகவும் நடித்திருந்தனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கினார் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். உலகம் முழுவதும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது.
இந்தப்படம் வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்து திரையுலகினர் பலரின் பாராட்டு மழையிலும் நனைந்தது. இந்திய அளவில் இந்தப் படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்திற்கான ஷுட்டிங்கையும் படக்குழுவினர் நடத்தினர்.
Jailer: ரஜினியுடன் முதன்முறையாக இணைந்த பிரபல நடிகை: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே.!
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டீசர் வரும் மார்ச் 1 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்திற்கான புரமோஷன் வேளைகளில் வரும் ஏப்ரல் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Thunivu: வசூல் குறித்து பொய்யான தகவல்: ‘துணிவு’ பட இயக்குனர் அதிரடி.!
‘பொன்னியின் செல்வன் 2’ படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.