சீட் பெல்ட் அணியாததால் பிரதமருக்கு அபராதம்; கடைமை மீறா காவல்துறை..!

பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் (42) சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்ததற்கு அந்நாட்டு காவல்துறை அபராதம் விதித்து மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. பிரதமர் ரிஷி சுனக்

கடந்த வியாழன் அன்று வடமேற்கு இங்கிலாந்தில் கார் பயணம் மேற்கொண்டார்.

அப்போது, பிரிட்டனின் 100க்கும் மேற்பட்ட நல திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக தனது அரசாங்கத்தின் புதிய லெவலிங் அப் ஃபண்ட் அறிவிப்புகளை விளக்கி வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிட்டார். பிரதமரின் வீடியோவை அந்நாடு மக்கள் பார்த்து கொண்டிருக்க, காவல்துறைக்கு அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் கண்ணில் பட்டது.

பிரதமர் ரிஷி சுனக் காரின் பின் இருக்கையில் அமர்ந்தபடி வீடியோ எடுத்தாலும் அவர் அந்நாட்டு விதிப்படி சீட் பெல்ட் அணியாமல் இருந்துள்ளார். அது வீடியோவில் பதிவாகி பொதுமக்களின் விமர்சனத்துக்குள்ளாக்கியது.

அதனை தொடர்ந்து, பிரதமர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். இருப்பினும், லங்காஷயர் காவல்துறை ரிஷி சுனக்கிற்கு 100 பவுன்ட் அபராதம் விதித்தது. இந்திய மத்திப்பில் 10,032 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் விதிப்படி அபராதத்தை கட்ட தவறினால் கோர்ட்டில் 500 பவுன்ட் அபராதம் செலுத்த நேரிடும்.

இதுகுறித்து பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; பிரதமர் வீடியோ எடுக்கும்போது மட்டுமே சீட் பெல்ட்டை கழற்றியதாகவும், இது தவறு என்று அவர் முழுமையாக ஏற்றுக்கொண்டு அதற்காக மன்னிப்புக் கேட்கிறார் என்றும் கூறப்பட்டது.

2021 ஆம் ஆண்டில் பிரிட்டனில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் சீட்பெல்ட் அணியவில்லை என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.