முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்த நபர்! உண்மை அறிந்து புகார்..விசித்திர தீர்ப்பு


இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்த நபர், இருவருடனும் இணைந்து வாழ விசித்திர தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மனைவியுடன் கருத்து வேறுபாடு

உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.

ஆனால், மனைவியுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை பிரிந்து சென்ற அவர் வேறொரு பெண்ணுடன் பழகியுள்ளார்.

இவர்களின் பழக்கம் திருமணம் வரை சென்றுள்ளது. தனது முதல் திருமணத்தை குறித்த நபர் மறைத்துள்ளார்.

இந்த நிலையில் தனது கணவர் இரண்டாம் திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தது முதல் மனைவிக்கு தெரிய வந்துள்ளது.

முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்த நபர்! உண்மை அறிந்து புகார்..விசித்திர தீர்ப்பு | Solution For Man Who Have 2 Wives Up

பேச்சுவார்த்தை

அதன் பின்னர் கணவர் மீது அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மூவரையும் அழைத்த பொலிஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் முடிவில் முதல் மனைவியுடன் திங்கள் முதல் புதன்கிழமை வரையும், இரண்டாம் மனைவியுடன் வியாழன் முதல் சனிக்கிழமை வரையிலும் குறித்த நபர் குடித்தனம் நடத்த வேண்டும் என்று பொலிஸார் கூறினர்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று குறித்த நபர் எந்த மனைவியுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அவருடன் இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

இதற்கு மூவரும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.