ஒரு போராளியாக எனது மகனை வளர்ப்பேன்: பிரித்தானிய இளவரசி வெளிப்படை


தமது மகனை பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராளியாக வளர்க்க விரும்புவதாக பிரித்தானிய இளவரசி யூஜெனி தெரிவித்துள்ளார்.

கண்ணோட்டம் முற்றிலுமாக மாறியுள்ளது

டாவோஸில் முன்னெடுக்கப்படும் உலக பொருளாதார மன்றத்தில் கலந்துகொண்டு பேசிய 32 வயதான இளவரசி யூஜெனி,
2021ல் ஆகஸ்ட் என்ற தனது மகனைப் பெற்றெடுத்தது முதல் சுற்றுச்சூழலைப் பற்றிய தம்முடைய கண்ணோட்டம் முற்றிலுமாக மாறியுள்ளது என்றார்.

ஒரு போராளியாக எனது மகனை வளர்ப்பேன்: பிரித்தானிய இளவரசி வெளிப்படை | My Son Activist Princess Eugenie

@instagram

2 வயதில் இருந்து இனி தமது மகன் ஒரு சமூக அக்கறை கொண்ட, பருவநிலை மாற்றத்திற்கு எதிரான ஆர்வலராக வளர்க்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
இளவரசி யூஜெனியின் கருத்தையே, தற்போது அமெரிக்காவில் குடியேறியிருக்கும் இளவரசர் ஹரியும் குறிப்பிடுகிறார்.

தாம் ஒரு தந்தையான பின்னர் தான், தமது கண்ணோட்டங்களும் பார்வையும் மொத்தமாக மாறியது என ஹரி குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி கிரேட்டா தன்பர்க் போன்ற சிறார் போராளிகளையும் ஹரி வெளிப்படையாக ஆதரித்து வந்துள்ளார்.

ஒரு போராளியாக எனது மகனை வளர்ப்பேன்: பிரித்தானிய இளவரசி வெளிப்படை | My Son Activist Princess Eugenie

@instagram

இளவரசி யூஜெனி

2019ல் போட்ஸ்வானா சென்றிருந்த போது கிரேட்டா தன்பர்க் முன்னெடுத்திருந்த சிறார்கள் பங்குகொண்ட ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து ஹரி கருத்து தெரிவித்திருந்தார்.

தற்போது இளவரசி யூஜெனியும், தமது தாயாரே தம்மை பொறுப்புள்ள, கைவிடப்பட்ட சமூகங்கள் மீது அக்கறை கொண்டவளாக தம்மை மாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாம் தாயானதிலிருந்து உலகை வித்தியாசமாகப் பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் இளவரசர் ஆண்ட்ரூவின் இளைய மகளான யூஜெனி.

ஒரு போராளியாக எனது மகனை வளர்ப்பேன்: பிரித்தானிய இளவரசி வெளிப்படை | My Son Activist Princess Eugenie

@getty



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.