கழுத்தில் கடிகாரம்., பொதுமக்கள் மீது பணத்தை பொழிந்த நபர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ


பெங்களூருவில் மேம்பாலத்திலிருந்து ஒருவர் பணத்தை பொதுமக்கள் மீது பொழிந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பணத்தாள்கள்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், தலைநகர் பெங்களூருவில் உள்ள கே.ஆர் புறம் மேம்பாலத்தின் மேலிருந்து, நகரின் பரபரப்பான மார்க்கெட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மக்கள் மீது பணத்தை அள்ளி வீசி எறிந்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. வீசப்பட்ட பணம் 10 ரூபாய் தாள்கள் எனவும், குறைந்தது 3,000 மதிப்புள்ள நோட்டுகளை அவர் வீசியதாக , சம்பவத்தின் போது அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

கழுத்தில் கடிகாரம்., பொதுமக்கள் மீது பணத்தை பொழிந்த நபர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ | Bengaluru Man Throws Cash Money From Flyover Video

குவிந்த மக்கள்

அவ்வழியே நடந்து சென்றவர்களும், வாகன ஓட்டிகளும் வியப்பில் ஆழ்ந்தனர், அவர்களின் காலில் கரன்சி நோட்டுகள் விழத் தொடங்கியதைக் கண்டு நம்பவே முடியவில்லை. மக்கள் பணத்தாள்களை போட்டிபோட்டுக்கொண்டு எடுத்தனர்.

வழக்கமாக நெரிசல் மிகுந்த கே.ஆர் மார்க்கெட் பகுதியில் இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேம்பாலத்தின் இருபுறமும் கரன்சி நோட்டுகள் வீசப்பட்டன.

மக்கள் கரன்சி நோட்டுகளை எடுக்க வெறித்தனமாக முன்னோக்கிச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த போக்குவரத்து பொலிஸார் கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

கழுத்தில் கடிகாரம் கட்டிக்கொண்டு வந்த நபர்

கோட் சூட் அணிந்துக்கொண்டு, கழுத்தில் சுவர்க் கடிகாரத்தைக் கட்டிக்கொண்டு காணப்பட்ட அந்த நபர் யார், எதற்காக பணத்தை அப்புறப்படுத்தினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பொலிஸ் குழு அங்கு வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியதாக அந்த நபர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.