சென்னை: குழந்தை பிறப்பு உள்ளிட்ட சர்ச்சை கருத்துகள் தொடர்பாக சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ இயக்குநர் அலுவலகத்தில் ஆஜரான ஷர்மிகாவிடம் விசாரணை நடைபெறுகிறது. அறிவியல் ஆதாரங்களோடு தான் கருத்து கூறினாரா என்பது குறித்து சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
