பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவில் தேவஸ்தான சேர்மன் டாக்டர் விஜயன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தந்திரி தினேஷன் நம்பூதிரிப்பாட், மனோஜ், நிர்வாகி விநயன், தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் முன்னிலையில் சேற்றுவாவைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர், பால் பாயாசம் தயாரிப்புக்கு மெகா சைஸ் உருளியை காணிக்கையாக செலுத்தினார். பிப். 25ம் தேதி முதல் இந்த உருளியில் பால் பாயாசம் தயார் செய்து மூலவருக்கு நைவேத்யம் சமர்ப்பிக்கப்படுகிறது.
பின்னர் அன்னதானத்துடன் பக்தர்களுக்கு பால் பாயாசம் வழங்கப்படும். இரண்டேகால் டன் எடை கொண்டதும், 4 காதுகள் உடையதுமான இந்த மெகா சைஸ் உருளி பருமலை அனந்தன் தலைமையில் உருவாக்கப்பட்டது. இதில் 40 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ரூ.30 லட்சத்தில் தயாரான இந்த உருளியில், 1500 லிட்டர் பால் பாயாசம் தயாரிக்கலாம்.