புதுச்சேரி: புதுச்சேரியில் மாநில அரசு அறிவித்துள்ளபடி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதியுதவி நேற்று (25-01-23) மாலை தொடங்கி வைக்கப்பட்டது. முதலமைச்சர் என்ஆர்.ரங்கசாமிம், ஆளுநர் தமிழிசையும் இணைந்து பயனர்களுக்கான திட்டத்தை தொடங்கி வைத்தனர். புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் அம்மாநில முதலமைச்சர் என்ஆர். ரங்கசாமி, கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார். அதன்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு […]
