பொலிஸார் தாக்கி ஆணுறுப்பை இழந்த பிரான்ஸ் இளைஞர்! ஓய்வூதிய போராட்டத்தில் நேர்ந்த விபரீதம்


பிரான்ஸ் ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் இளைஞர் ஒருவரின் விதைப்பை-யை பொலிஸார்கள் சிதைத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு

பிரான்ஸில் ஓய்வூதியம் பெறும் வயது 62ல் இருந்து 64ஆக உயர்த்த கடந்த சில ஆண்டுகளாகவே அந்த நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அரசு முயன்று வருகிறது.

இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் எலிசபெத் போர்ன் ஓய்வூதிய திட்டங்களில் புதிய பரிந்துரைகளை அறிவித்து இருந்தார்.
அதில் 2027ம் ஆண்டில் தனக்குரிய முழுமையான ஓய்வூதியம் பெறுவதற்கு ஒருவர் 43 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்த பரிந்துரைகளால் பிரான்ஸ் அரசு ஊழியர்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்ததுடன், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக போராட்டத்திலும் குதித்தனர்.

இது தொடர்பாக ஜனவரி 20ம் திகதி நடைபெற்ற போராட்டத்தில் குழப்பங்கள் வெடித்த நிலையில், தேவையில்லாத அசம்பாவிதங்களை தவிர்க்க போராட்டகாரர்கள் மீது பல இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளை பொலிஸார் வீசினார்கள்.

 பறிபோன இளைஞரின் ஆண்மை

இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதில், அவருடைய விதைப்பை-யை பொலிஸார் சிதைத்துள்ளனர்.

இது குறித்து லிபரேசன் செய்தித்தாள் வெளியிட்ட தகவலில், எஸ்.இவான் என்ற 26 வயதுடைய பொறியாளர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட போது பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.

கலவரத்தை இவான் கேமராவில் பதிவு செய்து கொண்டு இருந்த போது, பொலிஸார் ஒருவர் அவரை கீழே தள்ளிவிட்டுள்ளார், அப்போது மற்றொரு பொலிஸார் லத்தியால் இவானின் இடுப்பில் தாக்கியுள்ளார்.

பொலிஸார் தாக்கி ஆணுறுப்பை இழந்த பிரான்ஸ் இளைஞர்! ஓய்வூதிய போராட்டத்தில் நேர்ந்த விபரீதம் | Young Man Scrotum Damage In A Protest In France

இதில் இவானின் ஆண் உறுப்பில் உள்ள விதைப்பை பலமாக தாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இளைஞர் இவானின் விதைப்பை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால் அதிலிருந்து இன்னும் அவரால் மீள இயலவில்லை.

இவானின் வழக்கறிஞர் இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த பொலிஸார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.