சென்னை: குடியாசு தின விழா கொண்டாட்டம் காரணமாக மெரினாவில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குடியாசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் நாள் சென்னை, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் கலந்துகொள்ளும் குடியரசு தின விழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறவுள்ளது.