கொலம்பியாவின் பிரபல DJ ஒருவர் குப்பைத் தொட்டியில் கைவிடப்பட்ட சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணின் காதலலர் தலைமறைவு
கொலம்பியா தலைநகரான பொகோடாவிலேயே 23 வயதான பிரபல DJ Valentina Trespalacios என்பவரின் சடலம் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
Credit: Newsflash
உடற்கூராய்வில், அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், குறித்த பெண்ணின் காதலரும் டெக்சாஸ் பகுதியை சேர்ந்தவருமான ஜான் பவுலோஸ் என்பவரை பொலிசார் தேடிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, சம்பவத்திற்கு பின்னர் ஜான் பவுலோஸ் தமது சமூக ஊடக பக்கங்களை நீக்கியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
35 வயதான ஜான் பவுலோஸ் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், கொலம்பியா பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர்.
8 மாதங்களாக இருவரும் காதல்
கடந்த 8 மாதங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்பானிய மொழி மட்டுமே தெரிந்த Valentina Trespalacios மொபைல் செயலி ஊடாக தமது காதலர் பவுலோஸிடம் ஆங்கிலத்தில் பேசி வந்துள்ளார்.
Credit: Newsflash
கடைசியாக இருவரும் விருந்து ஒன்றிற்கு ஒன்றாக சென்றதாகவும், அதன் பின்னர் ஜனவரி 22ம் திகதி Valentina சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிசார் கூறுகின்றனர்.
மேலும், ஜான் பவுலோஸ் நாட்டை விட்டு வெளியேறினாரா என்பதை உறுதி செய்யவும் பொலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.