பார்லிமென்ட் பக்கமே போகாத இளையராஜா

புதுடில்லி : ராஜ்யசபா நியமன எம்பி.,யாக உள்ள இசையமைப்பாளர் இளையராஜா நடந்து முடிந்த பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் ஒரு நாள் கூட பங்கேற்கவில்லை.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், ஜனாதிபதியால் ராஜ்யசபா நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே ஆகியோர் ராஜ்யசபா நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த இளையராஜா இந்தியா திரும்பியதும் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் ராஜ்யசபா நியமன எம்பியான இசையமைப்பாளர் இளையராஜா ஒரு நாள் கூட பங்கேற்கவில்லை. இது மாநிலங்களவை வெளியிட்டுள்ள பதிவேட்டு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறை சார்ந்த வல்லுனர்களை ராஜ்யசபா உறுப்பினர்களாக தேர்வு செய்வது என்பது அந்த துறையின் சார்பில் உள்ள பிரச்னைகளை அரசின் கவனத்தை கொண்டு வருவதற்காகத்தான். ஆனால் அவ்வாறு நியமிக்கப்படுகிறவர்கள் அதனை வெறும் அலங்கார பதவிகளாகத்தான் பயன்படுத்தி வருகிறார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.