5 நாட்களுக்கு லாக்டவுன் அமல்… விநோத சுவாச பாதிப்பு- கலங்கும் வடகொரியா!

உலகம்
கொரோனா வைரஸ்
பிடியில் இருந்து விடுபட்டதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உருமாறிய வைரஸ்கள் வரிசையாக படையெடுத்து வருகின்றன. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடகொரிய நாட்டின் தலைநகர் பியோங்யாங்-கில் பலருக்கும் சுவாசப் பாதிப்புகள் உண்டாகியிருக்கிறது. இது வேகமாக பிறருக்கும் பரவுவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

5 நாட்கள் ஊரடங்கு

இதனை கொரோனா பாதிப்புகள் என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. இருப்பினும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளது. அதன்படி, வரும் ஞாயிறு வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு லாக் டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். ஒவ்வொரு நாளும் உடல் வெப்பநிலையை பலமுறை சோதித்து பாருங்கள்.

பாகிஸ்தான் இஸ்லாமாபாத் லாகூர் கராச்சி நகரங்களில் பல மணி நேரம் மின்வெட்டு மக்கள் கடும் அவதி!

கடைகளில் குவிந்த கூட்டம்

அவசர உதவிகள் தேவைப்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவமனையை அணுகுங்கள் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. லாக்டவுன் அறிவிப்பு வெளியான நிலையில் நேற்றைய தினம் நகரின் பல்வேறு கடைகளில் கூட்டம் அலைமோதியது. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதற்காக குவிந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

இதையடுத்து இன்று காலை முதல் லாக்டவுன் உத்தரவு அமலுக்கு வந்தது. பியோங்யாங் நகரை போன்று வேறு நகரங்களில் லாக் டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா? என தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பியாங்யோங் நகரில் பாதிப்புகள் தொடரும் பட்சத்தில் லாக் டவுன் நீட்டிக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

முதல் வைரஸ் பாதிப்பு

எனவே மீண்டும் ஒரு நீண்ட லாக் டவுனிற்கு மக்கள் தயாராக வேண்டுமா? எனக் கேள்வி எழுந்துள்ளது. வடகொரியாவை பொறுத்தவரை 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்த சர்ச்சைகளும் எழுந்தன.

இந்நிலையில் 2022ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. தினசரி பலருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சொல்லப்பட்டது. மொத்த பாதிப்புகள் 4.77 மில்லியன் வரை சென்றது.

ஜப்பானில் குறைந்த பிறப்பு விகிதம்; பிரதமர் கவலை.!

மீண்டும் வந்த சிக்கல்

ஜூலை இறுதி வரை புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன. இந்த சூழலில் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனாவை வெற்றி கண்டுவிட்டதாக அறிவித்து ஆச்சரியப்படுத்தியது. ஆனால் தினசரி பாதிப்பு எத்தனை பேர்? உயிரிழப்புகள் ஏதேனும் இருந்ததா? போன்ற தகவல்களை அரசு வெளியிடவில்லை. இதன் பின்னணியில் போதிய அளவில் பரிசோதனைகள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

சுமார் 6 மாதங்கள் எந்தவித பிரச்சினையும் ஏற்படாத நிலையில் தற்போது மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. இதுதொடர்பான விரிவான புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.