Vijay antony: விபத்தில் படுகாயமடைந்த விஜய் ஆண்டனியின் தற்போதைய நிலை..அவரே வெளியிட்ட தகவல்..!

தமிழ் சினிமாவில் ஹெட்டர்ஸ் இல்லாத ஒரு சில நடிகர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். இவரின் இசைக்கும், நடிப்பிற்கும் எவ்வாறு ரசிகர்கள் இருக்கின்றார்களோ அதே போல இவரது குணத்திற்காகவே இவருக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர்.

எளிமை, எதார்த்தம் என இருக்கும் விஜய் ஆண்டனி தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகின்றார். சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து பரபரப்பான இசையமைப்பாளராக வலம் வந்தார்.

Thunivu: வினோத்தின் அடுத்த பட ஹீரோ இவரா ? செம ட்விஸ்ட்டா இருக்கே..!

இதைத்தொடர்ந்து சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் விஜய் ஆண்டனி. இவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி தானே நடித்து வருகின்றார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதையடுத்து அப்படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. கடலில் எடுக்கப்பட்ட ஒரு பாடல் காட்சியின் போது எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனிக்கு விபத்து நேரிட பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியாக்கியது. இதையடுத்து தொடர்ந்த சிகிச்சையில் இருக்கும் விஜய் ஆண்டனி தற்போது தன் உடல் நிலை குறித்து சமூகத்தளத்தில் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, விபத்தில் தாடை மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு தற்போது சரியாகியுள்ளது

அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் தேறி வருகின்றேன். விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுவேன். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள் என தெரிவித்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்நிலையில் இவர் வெளியிட்ட தகவலின் மூலம் விஜய் ஆண்டனி தற்போது நலமுடன் உள்ளார் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.