அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்கியது ஒன்றிய அரசு..!

சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் பொதுப்பணித்துறை திட்டத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்கியுள்ளது. அடையாறு ஆறு சென்னையின் முக்கியமான 3 ஆறுகளின் ஒன்றாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகே மணிமங்கலத்தில் உருவாகும் இந்த ஆறு சென்னையில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 42.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு பயணம் செய்யும் இந்த ஆறு அடையாறு, பேசன்நகர் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு சுற்றுசுழல் கழிமுக அமைப்பை ஏற்படுத்துகிறது.

அதிக மாசு இருந்த போதிலும் படகு, மீன்பிடித்தல் போன்றவை இந்த ஆறில் இதற்கு முன்னர் நடைபெற்றது. தற்போது அடையாறு ஆறு அதிகப்படியான கழிவுநீரை வெளியேற்றும் பகுதியாக விளங்குகிறது. இந்நிலையில் ஆற்றின் முகத்துவார பகுதியை தூர்வார பொதுப்பணித்துறை திட்டமிட்டது. அதன் அடிப்படையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இது தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு அனுமதி பெறுவதற்காக காத்திருப்பில் இருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்கியுள்ளது.

ரூ.21.63 கோடியில் திரு.வி.க. பாலம் முதல் அடையாறு ஆறு கடலில் கலக்கும் இடம் வரை 176,35 ஏக்கரில் தூர்வார அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அலையாத்தி தாவரங்கள், தீவுகள் உள்ள இடம் தவிர்த்து 176.35 ஏக்கர் பரப்பளவில் முகத்துவாரம் தூர்வாரப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.