ஜெர்மனியில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து – 2 பேர் பலி

ஜெர்மனியில் ஓடும் ரயிலில் இளைஞர் கத்தியால் குத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

ஹம்பர்க் – கீல் நகரங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த ரயில், ப்ரோக்ஸ்டெட் நிலையத்தை நெருங்கியபோது, அங்கிருந்த பயணிகளைக் குறிவைத்து மர்மநபர் கத்தியால் சரமாரிக் குத்தினான்.

இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.