திரிபுரா தேர்தல்; 4 முறை முதல்வராக இருந்தவருக்கு வாய்ப்பு மறுப்பு.!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகளில் இருக்கின்றன. இதற்கான தேர்தல் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும். அந்த வகையில் 2018ல் நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட ஆட்சிக்கு முடிவு கட்டி பாஜக முதல்முறை ஆட்சியை பிடித்தது.

1993ல் தொடங்கி 2018 வரை தசரத் தெப்பர்மா (25 ஆண்டுகள்), மாணிக் சர்கார் (20 ஆண்டுகள்) என இரண்டு கம்யூனிஸ்ட் முதல்வர்கள் பதவியில் இருந்துள்ளனர். இந்நிலையில் கடைசியாக நடந்த தேர்தலில் வடகிழக்கில் பாஜகவிற்கு செல்வாக்கு கிடையாது என்ற பிம்பத்தை உடைத்தது. நான்கு ஆண்டுகளாக தீவிர களப்பணி ஆற்றிய பலன் பாஜகவிற்கு பலன் கொடுத்தது.

கடந்த 2013ம் ஆண்டு நடந்த திரிபுரா சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெறவில்லை. வெறும் 0.05 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றது. அதுவே 2018ல் பாஜக மட்டும் 36 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. 43.59 சதவீத வாக்குகள். 5 ஆண்டுகள் எந்தவித சிக்கலும் இன்றி ஆட்சியை தொடர்ந்த நிலையில், வரும் பிப்ரவரி 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்தியாவில் அதிக முறை மாநில முதல்வராக இருந்தவர்களின் பட்டியலை தூசு தட்டினால், அதில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த மாணிக் சர்காருக்கு ஒரு இடமுண்டு. 19 ஆண்டுகள் 363 நாட்கள் தொடர்ந்து முதல்வராக பதவி வகித்துள்ளார். மிக மிக எளிய வாழ்க்கை முறையை கொண்டவர். தனக்கு வரும் சம்பளத்தை கூட கட்சி நிதிக்காகவும் அர்ப்பணித்தவர்.

தனக்கென்று சொந்தமாக எதையும் வைத்துக் கொள்ளாத ஒருவர். இவருக்கு முன்பு தசரத் தெப்பர்மா 4 ஆண்டுகள் 335 நாட்கள் முதல்வராக இருந்தார். இதன்மூலம் திரிபுராவில் தொடர்ந்து 25 ஆண்டுகள் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி கட்டிலில் இருந்துள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மொத்தம் 35 ஆண்டுகள் திரிபுராவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள்.

பிரதமர் குறித்த ஆவணப்படம்; டெல்லி பல்கலையில் போர் சூழல்.!

இந்தநிலையில் வருகின்ற திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில், அதிக முறை முதல்வராக இருந்த மாணிக் சர்கார் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணிக் சர்கார் போட்டியிடாததன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 74 வயதான மாணிக் சர்காருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை எனவும், மாறாக அவர் மாநிலம் முழுவதும் இடதுசாரி பிரச்சாரத்தை வழிநடத்துவார் என்றும் கட்சி அறிவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.