பிரித்தானியாவில் காணாமல் போன 10 வயது சிறுமியை பொலிசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
பிரித்தானிய சிறுமி
Walton-ஐ சேர்ந்தவர் லிலா புல்லர் (10). இவர் கடந்த வியாழன் அன்று வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார்.
வெளியே சென்றிருந்த சிறுமியின் தாயார் வீட்டிற்கு வந்த போது வீட்டில் யாருமில்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
லிலா பள்ளிக்கூடத்திற்கும் அன்றைய தினம் செல்லவில்லை என தெரியவந்துள்ளது.
காணாமல் போன போது அவர் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான உடையை அணிந்திருந்தார் என தெரியவந்துள்ளது.
Merseyside police
உதவுங்கள்
காவல்துறை செய்தி தொடர்பாளர் மெர்ச்சிசைட் கூறுகையில், Waltonல் இருந்து காணாமல் போன 10 வயது லிலா புல்லரைக் கண்டுபிடிக்க உதவுமாறு நாங்கள் அவசர முறையீடு செய்கிறோம்.
லிலா 26ஆம் திகதி காலை முதல் வீட்டிலிருந்து காணவில்லை, மேலும் அவரைக் கண்டுபிடிப்பதற்கான விரிவான விசாரணைகள் தற்போது நடந்து வருகின்றன என கூறியுள்ளார்.