நாமக்கல் அருகே திமுக கொடி கட்டிய காரில் கள்ள நோட்டு கடத்தியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி :
சேந்தமங்கலம் அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற கொல்லிமலை பகுதியை சேர்ந்த செல்லதுரை, சதாசிவம், சிலம்பரசன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திமுக கட்சி கொடி கட்டிய காரில் கள்ள நோட்டுகளை மறைத்து வைத்து மாற்ற முயன்ற போது போலீசார் கூண்டோடு கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் ஒரு செய்தி : கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி பேருந்து ஒன்று மாலை பள்ளி முடிந்து மாணவ, மாணவிகளுடன் சென்றுகொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில், ஓட்டுநர் உட்பட பேருந்தில் பயணம் செய்த 22 மாணவர்கள் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அனுப்பிவைத்தனர்.