குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தடைவிதித்த உணவுபாதுகாப்பு துறை ஆணையரின் உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசின் குட்கா புகையிலை தடை சட்டத்திற்கு எதிராக பல்வேறு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கில் கடந்த வாரம் தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் சற்றுமுன் வெளியாகி உள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தற்போது விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், குட்கா தடையை உறுதி செய்ய சட்டம் அல்லது விதிகளில் திருத்தம் செய்யலாமா? அல்லது புதிய சட்டத்தை ஏற்றுவதா? என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து உச்சநீதிமன்ற சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை செய்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.