ஜெருசலேம்,-இஸ்ரேலில், மத வழிபாட்டு தலத்தில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலில் உள்ள கிழக்கு ஜெருசலேமின் நேவி யாகவ் பகுதியில், யூதர்களின் வழிபாட்டு தலம் அமைந்துள்ளது.
இங்கு நேற்று முன்தினம் இரவு கூடிய ஏராளமான யூதர்கள், வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர், இயந்திர துப்பாக்கியால் யூதர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இதில், ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மர்ம நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், காயம் அடைந்த அவர் பலியானார். போலீஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்தார்.
இதற்கிடையே, மர்ம நபர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த பலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இங்கு உள்ள ஜெனின் நகரில் சோதனை நடத்திய இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீனியர்கள் 10 பேரை சுட்டுக்கொன்ற அடுத்த நாளே, இந்த தாக்குதல் நடந்துள்ளதால், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர் பாலஸ்தீனியர் என சொல்லப்படுகிறது.
ஜெருசலேம் கிழக்கு பகுதியில், கடந்த சில மாதங்களாக பல லட்சம் யூதர்களை குடியமர்த்தி, பாலஸ்தீன மக்களை வெளியேற்றுவதில் இஸ்ரேல் படை மும்முரம் காட்டி வரும் நிலையில், துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement