ஜேர்மனியில் இந்தப் பணிக்கு பல்லாயிரக்கணக்கானோர் தேவை…


ஜேர்மனியில் ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று, ஜேர்மனியின் அனைத்து மாகாணங்களிலுமாக ஆசிரியர் பணியிடங்களுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தேவைப்படுகிறார்கள் என்கிறது.

ஆய்வில் தெரியவந்த தகவல்

மாகாண கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், தற்போது 12,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது.

ஆசிரியர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ள தகவல்

ஆனால், உண்மையில் 40,000 பணியிடங்கள் வரை காலியாக இருக்கலாம் என ஆசிரியர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பல பள்ளிகளில், ஆசிரியர்கள் தட்டுப்பாடு காரணமாக முன்கூட்டியே பாடங்கள் ரத்துசெய்யப்படுவதால் அந்த இடங்களில் காலியாக இருக்கும் பணியிடங்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்கிறது ஆசிரியர்களின் கூட்டமைப்பு.
 

ஜேர்மனியில் இந்தப் பணிக்கு பல்லாயிரக்கணக்கானோர் தேவை... | People Are Needed For This Work In Germany



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.