டெல்லி: இந்திய அரசின் இணையதளத்தில் தமிழ்நாடு என்ற பெயருக்கு பதிலாக தமிழ்நாயுடு என எழுத்து பிழையுடன் காணப்பட்டது,. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், உடனே அதை திருத்தவும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, அந்த எழுத்துப்பிழை திருத்தப்பட்டது. நேற்று முன்தினம் (26ம் தேதி) நாடு முழுவதும் 74வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதன்முறையாக எகிப்து அதிபர் பங்கேற்ற நிலையில், முதன்முறை யாக டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். […]
