திமுக அமைச்சர் உதயநிதி பங்கேற்ற விழாவிற்கு மின்சாரம் திறக்கப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
நாமக்கல் அடுத்த பொம்மைக்குட்டை மேட்டில் தமிழக அரசின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், திமுகவின் இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் 678 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த விழாவிற்கு காலி இடத்தில் பொதுப்பணித்துறை சார்பாக பந்தல் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த விழாவிற்காக அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடப்பட்டதாக வீடியோவுடன் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து மின்சாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்த அரசு விழாவிற்கு மின்வாரியத்தால் எவ்விதமான தற்காலிக மின் இணைப்பும் வழங்கப்படவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.