பிப்., 5ஆம் தேதி காலை 9 மணிக்கு… முக்கிய தகவலை சொன்ன முன்னாள் அமைச்சர்..!

மதுரை விமான நிலையம் அருகே உள்ள கருப்பசாமி கோவிலில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி ஐந்தாயிரம் பேர் அதிமுக-வில் இணைய உள்ளனர்.

அந்த நிகழ்ச்சி நடக்கவுள்ள இடத்தை ஆர்பி உதயகுமார், டாக்டர் சரவணன், அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் பார்வையிட்டனர். தொடந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி தைப்பூச திருநாளன்று காலை 9 மணி அளவில் 5 ஆயிரம் பேர் வெவ்வேறு கட்சிகளில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய உள்ளனர்.

மதுரை வலையங்குளம் கருப்பசாமி கோவில் மேடைகள் அமைக்கும் பணி டாக்டர் சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது என்றார்.

ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு எந்த அளவு உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. பூத் வாரியாக களப்பணிகள் ஆற்ற திட்டமிட்டுள்ளோம். மெகா தேர்தல் குழுவை எடப்பாடி அறிவித்த பின்னர்தன் அனைத்து கட்சிகளும் அதற்கு அடுத்து ஆலோசனை செய்து வருகின்றனர்.

இதற்காக தேர்தல் வியூகம் அமைத்து எடப்பாடியார் தலைமையில் நேற்று எட்டு மணி நேரத்திற்கு மேல் ஒவ்வொரு அதிமுக நிர்வாகிகள் பூத் வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக அச்சாரமாக இந்த ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும் என்பது ஈரோடு பொதுமக்களிடம் தெரிகிறது. திராவிட அரசு இந்த 18 மாத காலமாக அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு உள்ளனர். எடப்பாடி பழனிசாமி நிதிகள் ஒதுக்கி தொடங்கிய திட்டங்களுக்கு திமுகவினர் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கின்றனர் என்றார்.

தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பிப்ரவரி 5ஆம் தேதி காலை 9 மணி அளவில் வெவ்வேறு கட்சிகளில் இருந்து குறிப்பாக இளைஞர்கள் ஐந்தாயிரம் பேருக்கு மேல் அதிமுகவில் இணைய உள்ளனர் என்பதை கூறி நெகிழ்ந்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் யாரை வேட்பாளாராக நிறுத்தலாம் என்று அதிமுக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் வேட்பாளர் தேர்வு, விருப்ப மனு பெறுவது உள்ளிட்ட விஷயங்களில் ஆலோசனை நடத்தி வருகிறார். இருவரது தரப்பில் இருந்தும் இன்னும் இரண்டு நாட்களில் அறிவிப்பு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.