கடலூர் மாவட்டத்தில் உள்ள ராசா பாளையம் என்ற கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிங்காரவேலு ராஜி என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தாய்-தந்தையை இழந்த 14 வயது சிறுமி உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை ராஜு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி மற்றொரு உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கேயும் ராஜுவின் சகோதரர் சிங்காரவேலு சிறுமையை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து சிறுமி விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிங்காரவேலு மற்றும் ராஜா இரு வரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜுவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிங்காரவேலுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டு உள்ளார்.