ராஷ்டிரபதி பவனில் முகலாய தோட்டத்தின் பெயர் மாற்றம்

ராஷ்டிரபதி பவனில் அமைந்துள்ள முகலாய தோட்டம் தற்போது அம்ரித் உத்யன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அம்ரித் உத்யானில் (முகலாய தோட்டம்) 12 வகையான துலிப் மலர்கள் உள்ளன. டூலிப்ஸ் மற்றும் ரோஜாக்களை மக்கள் காணக்கூடிய வகையில், இப்போது பொது மக்களுக்காக தோட்டம் திறக்கப்பட உள்ளது.

ஜனவரி 31 முதல் திறப்பு 

ஒவ்வொரு ஆண்டும் அம்ரித் உத்யன் சாதாரண மக்களுக்காக திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி திறக்கப்படுகிறது. மார்ச் 26 வரை இரண்டு மாதங்கள் பொதுமக்களின் பார்வைக்காக திறந்திருக்கும். நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முகலாய தோட்டம் திறந்திருக்கும். மார்ச் 28-ம் தேதி விவசாயிகளுக்கும், மார்ச் 29-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும், மார்ச் 30-ம் தேதி காவல்துறை மற்றும் ராணுவத்தினரும் பார்வையிடலாம். 

அனுமதி பெறுவது எப்படி?

குடியரசு தலைவர் மாளிகையில் இருக்கும் அம்ரித் உதயன் தோட்டத்தை பார்வையிட ஆன்லைனில் டிக்கெட் பெறலாம். காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை 7500 பேருக்கு டிக்கெட் கிடைக்கும். அதன் பிறகு மதியம் 12 மணி முதல் 4 மணி வரை 10 ஆயிரம் பேர் நுழைவார்கள். தோட்டத்தில் 12 வகையான சிறப்பு வகை துலிப் பூக்கள் நடப்பட்டுள்ளன. தோட்டத்தில் செல்ஃபி பாயின்ட்கள் உள்ளன, அதே போல் ஃபுட் கோர்ட்டும் இங்கு செயல்படும். QR குறியீட்டில் இருந்து மக்கள் தாவர வகைகளைப் பற்றிய தகவல்களைப் பெற முடியும். மேலும் 120 வகையான ரோஜாக்கள் மற்றும் 40 வாசனை ரோஜாக்கள் உள்ளன.

பெயர் மாற்றம் பின்னணி

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் முகாலயர்கள் பெயரில் இருக்கும் இடங்கள், முக்கியமான ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு ஊர்களின் பெயர்கள் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் இருக்கும் முகலாய தோட்டம் இப்போது அம்ரித் உதயன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.