வேளாண் கல்லூரி மாணவியர் உழவன் செயலி குறித்து விளக்கம்| Agricultural college students explain about Ulhavan app

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முகமது அஸ்லாம், அதியமான் வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நான்காம் ஆண்டு இளங்கலை படித்து வரும் மாணவியருக்கு, ‘உழவன் செயலி’ குறித்து எடுத்துரைத்தார். மேலும் இந்த செயலியின் பயன்பாடுகளை கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள விவசாயிகளுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அதன்படி, ஆலப்பட்டி கிராமத்திற்கு வேளாண் அலுவலர் பிரியாவுடன் மாணவியர் அம்பிகா, நிருபாஷினி; கட்டிகானப்பள்ளி கிராமத்திற்கு, வேளாண் அலுவலர் ஜோதியுடன், மாணவியர் காவியா, நர்மதா; மோரமடுகு கிராமத்திற்கு வேளாண்மை உதவி அலுவலர் சிவராசுவுடன் மாணவியர் ஹபீபா, வினோதினி; தேவசமுத்திரம் கிராமத்திற்கு வேளாண் இளநிலை உதவியாளர் ஹரி கிருஷ்ணனுடன் மாணவியர் தீபா, மாலினிஸ்ரீ மற்றும் பெத்ததாலாப்பள்ளி கிராமத்திற்கு வேளாண் உதவி அலுவலர் சென்னகேசவனுடன் மாணவியர் சாருகேஷினி, லின்சி, மோனிகா ஆகியோர் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்து, அச்செயலியை விவசாயிகளின் மொபைல் போனில் பதிவிறக்கம்

செய்துகொடுத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.