இளவரசி டயானாவின் ஆடை ரூ. 5 கோடிக்கு விற்பனை | Princess Dianas dress cost Rs. 5 crore for sale

நியூயார்க் : ஐரோப்பிய நாடான பிரிட்டனின் இளவரசி, மறைந்த டயானாவின் ஆடை, அமெரிக்காவில் நடந்த ஏலத்தில், 5 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த பிரபல ஏல நிறுவனமான சாத்பைஸ், தங்களிடம் உள்ள பொருட்களை சமீபத்தில் ஏலத்தில் விற்பனை செய்தது.அப்போது, 1997ல் கார் விபத்தில் பலியான, பிரிட்டன் இளவரசி டயானாவின் ஆடைகள் ஏலத்தில் விடப்பட்டன. இதில், இவர் பயன்படுத்திய கவுன் 4.9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஏலத்தில் எடுத்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

இதுவரை ஏலத்தில் விடப்பட்ட டயானாவின் ஆடைகளிலேயே, இதுதான் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏராளமான முத்துகள், பட்டு இழைகள் என சிறப்பாக தயாரிக்கப்பட்ட நீல நிற வெல்வெட் ஆடையை, 1991 மற்றும் 1997ம் ஆண்டுகளில் இளவரசி டயானா அணிந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.இளவரசி டயானாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளரான பிரிட்டனைச் சேர்ந்த விக்டர் எடெல்ஸ்டீன், இந்த ஆடையை வடிவமைத்திருந்தார்.

புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளின் நலனுக்காக செயல்படும் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக, டயானா பயன்படுத்திய உடைகளை பிரிட்டன் அரச குடும்பத்தினர், 2002ல் ஏலத்தில் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.