ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் ஆசை இதுதானாம்… பளீச்னு சொல்லிட்டாரே!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில்
திமுக
தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும்
காங்கிரஸ்
வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன், தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி,

வேட்பாளர் அறிமுகம் கூட்டம்

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், இளைஞர் அணியின் மாநில செயலாளர் சூர்யமூர்த்தி, கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகள் மற்றும் காங்கிரஸ் பேரியிக்கம் என்னை வேட்பாளராக போட்டியிட சொன்னதால் தான் போட்டியிடுகிறேன்.

சோனியாவிற்கு நன்றிக்கடன்

காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாடு தலைவராக 3 முறை இருந்துள்ளேன். அதுமட்டுமல்ல முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது என்னை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதை எனது கடமையாக நினைக்கிறேன்.

என்னுடைய ஆசை

நான் சட்டமன்ற உறுப்பினராக சத்தியமங்கலத்தில் இருந்துள்ளேன். கோபியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். இங்கெல்லாம் எந்த கெட்ட பெயரையும் வாங்கியதில்லை. எனது வாழ்நாளில் 75 சதவீதத்தை முடித்து விட்டேன். இன்னும் 25 சதவீதம் மட்டுமே இருக்கிறது. அந்த 25 சதவீதத்தையும் ஈரோடு மக்களுக்காக உழைக்க வேண்டும் என்கிற ஆசையில் நான் போட்டியிடுகிறேன்.

பெரியாரின் செயல்பாடுகள்

எனது தாத்தா பெரியார். ஈரோடு நகராட்சியில் தலைவராக இருந்த போது தமிழகத்தில் முதன்முதலில் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அறிமுகம் வந்தார். அதற்கு ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுபோல பல திட்டங்களை அவர் செயல்படுத்தி உள்ளார்.

ஓய்வெடுக்காத ஸ்டாலின்

என்னை பொறுத்தவரை சட்டமன்ற உறுப்பினராகி பதவி சுகம் வேண்டும் என்பதற்காக வரவில்லை. ஏற்கனவே எம்.எல்.ஏ உருவத்திலும், எம்.பி உருவத்திலும், அமைச்சர் உருவத்திலும் என்னை பார்த்து விட்டேன். தமிழ்நாட்டில் பதவியேற்ற நாள் முதல் ஓய்வெடுக்காமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் உழைத்து கொண்டிருக்கிறார்.

ஈரோடு மக்கள் நலன்

அவருடன் பணியாற்ற நானும் விரும்புகிறேன். நான் இப்போது சட்டமன்ற உறுப்பினராக வர வேண்டும் என்பதற்கு காரணம், ஈரோடு மக்களுக்கு நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்பதற்காகவே. எனது மகன் திருமகன் ஈ.வெ.ரா செய்த திட்டங்களை தொடர்வதற்காக வருகிறேன். எனக்கு என்று தனியான ஆசை எதுவும் இல்லை.

நல்ல பெயரோடு ஈரோடு மக்களுக்கு கடைசி காலத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருக்கிறது. அதன் காரணமாக தான் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறேன். உங்களுக்காக மற்றும் ஈரோடு மக்களுக்காக நான் உழைக்க ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் என்று கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.