உ.பி. திருமண நிகழ்ச்சிகளில் புதிய மாற்றங்கள் – மணமக்கள் வரவேற்பில் இடம்பெறும் வர்ணனையாளர்கள்

புதுடெல்லி: நாட்டின் பெரிய மாநிலங்களில் உ.பி. முக்கிய மாநிலமாக உள்ளது. பாரம்பரியம், கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்ற இந்த மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகள் பெரும்பாலும் குளிர்காலத்தில் நடைபெறுகிறது. இதில் ஆண்டுதோறும் மாற்றங்கள் இடம்பெறுவது உண்டு.

அந்த வகையில் கடந்த நவம்பரில் தொடங்கிய திருமணக் காலத்தில் வர்ணனையாளர்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கி யுள்ளனர். வழக்கமாக விழா மேடைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இடம்பெறும் இவர்கள் தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் இடம்பெறத் தொடங்கியுள்ளனர்.

உ.பி. திருமணங்களில் கையில் ஒலிபெருக்கியுடன் ஆண் அல்லது பெண் வர்ணனையாளரை பார்க்க முடிகிறது. சில திருமணங்களில் இருவரும் கூட மாறி, மாறி நிகழ்ச் சியை தொகுத்து வழங்குகின்றனர். மேடையில் மணமக்களை வாழ்த்த வரும் விருந்தினர்கள் பற்றியும் இவர்கள் சில வார்த்தைகள் கூறி மகிழ்விக்கின்றனர்.

இவர்கள் திருமண நிகழ்ச்சிக்கு முன்னதாகவே மணமக்கள் பற்றிய பல சுவையான தகவல்களை திரட்டி வைத்துக் கொள்கின்றனர். இத்துடன் இவர்களின் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பற்றியும் அறிந்து கொள்கின்றனர். இவர்கள் அனைவரையும் மேடையில் பாராட்டி மகிழ்விப்பது இவர்களது புதிய பணியாகி விட்டது. இதற் காக சில மணி நேரத்திற்கு இவர்கள் ரூ.5,000 முதல் 20,000 வரை ஊதியமாகப் பெறுகின்றனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கான்பூரின் வர்ணனையாளர் கனிஷ்கா கூறும்போது, “தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக முயன் றேன். ஆனால் அது முடியாமல் போனது. தற்போது அதைவிட இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதில் புதியவர்களின் தொடர்புகளும் பெரியவர்களின் ஆசிகளும் கிடைக்கிறது. நாங்கள் பேசும் மேடை நிகழ்ச்சி முழுவதையும் வீடியோ பதிவு செய்து, கண்டு களிப்பது எங்கள் பெருமையை பேசுவதாகவும் உள்ளது” என்றார்.

பெரும்பாலும் நடுத்தர குடும்ப திருமண நிகழ்ச்சிகளில் இந்தவர்ணனையாளர்கள் இடம்பெறுகின்றனர். முஸ்லிம்கள் இம்முறையை இன்னும் பயன்படுத்தத் தொடங்கவில்லை. திருமணம் தவிர பிறந்த நாள் உள்ளிட்ட வேறு சில குடும்ப நிகழ்ச்சிகளிலும் வர்ணனையாளர்களை உ.பி.வாசிகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் பேச்சுத்திறமை கொண்ட வர்ணனையாளர் களுக்கு புதிய மேடையாக இந்த நிகழ்ச்சிகள் அமைந்து வருகின்றன.

மணமக்கள் பற்றிய பல சுவையான தகவல்களை திரட்டி வைத்துக் கொள்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.