சென்னை: ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘நபா தாஸின் துரதிர்ஷ்டவசமான மரணம் ஆழ்ந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது, நபா தாஸ் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
