”காலநிலை மாற்றத்தை தடுக்க, அனைவரும் விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டியது அவசியம்,” என, வானிலை ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் ரமணன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசினர் பெண்கள் கல்லுாரியின் புவியியல் துறை சார்பில், காலநிலை மாற்றம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் ரமணன் பேசியதாவது:
உலகின் பல நாடுகளில் காலநிலை மாற்றத்தால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நம் நாட்டிலும் காலநிலை மாற்றத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
புவியின் தட்பவெப்ப நிலை மாற்றத்தால், பனிக்கட்டிகள் உருகி, கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
காலப்போக்கில், புவி வெப்பமயமாதல் மேலும் அதிகரித்து, இந்தியா மிகப்பெரிய இயற்கை சீற்றங்களை, பேரழிவுகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, வருங்கால சந்ததியினர் இயற்கை பேரழிவுகளில் பாதிக்கப்படாமல் இருக்கவும், காலநிலை மாற்றத்தை தடுக்கவும், அனைவரும் விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டியது அவசியம்.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தான், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளில் இருந்து, நாம் தற்காத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement