சுவிட்சர்லாந்தில் நடந்த கார் விபத்தில் இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் அவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
2 இலங்கை தமிழர்கள் உயிரிழப்பு
இலங்கையின் சுழிபுரம் கிழக்கை பூர்வீகமாக கொண்டவர்கள் Thanapalasingham Kannan (69) மற்றும் Kannan Suresh (34).
இருவரும் தந்தை மற்றும் மகன் ஆவார்கள்.
Thanapalasinghamமும், Kannan-ம் சமீபத்தில் சுவிட்சர்லாந்துக்கு குடியேறினார்கள்.
இந்த நிலையில் சென்.கேலன் (St.Gallen) நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
புகைப்படம்
காரை Kannan ஓட்டிய நிலையில் விபத்தில் சிக்கியிருக்கிறது.
இதில் சம்பவ இடத்திலேயே Kannan உயிரிழந்த நிலையில், Thanapalasingham மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் அவர்கள் சென்ற கார் பலத்த சேதமடைந்து நொறுங்கியது வெளியான புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.