சிறப்பு வகை ஜவுளித் துறையைச் சேர்ந்த, 15 வகையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்காக, 32 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
தொழில் துறை அமைச்சரின் தலைமையிலான, 5 பேர் அடங்கிய குழுவானது, மருத்துவ ஜவுளி, கட்டுமானங்களுக்கான ஜவுளி உள்ளிட்ட 15 சிறப்பு வகை ஜவுளிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 32. 25 கோடி ரூபாயை ஒதுக்கி அனுமதி வழங்கி உள்ளது.
தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ், இந்த திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில், தொழில்நுட்ப ஜவுளிகளை ஊக்குவிப்பது காலத்தின் தேவை.
தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் ஆதரவுடன், உயர் மதிப்பு தொழில்நுட்ப ஜவுளி தயாரிப்புகளை, உள்நாட்டிலேயே உருவாக்க முன்னணி ஜவுளி உற்பத்தியாளர்கள், மற்றும் நிறுவனங்கள் ஒன்றிணைய வேண்டும்.
மேலும் தொழில்நுட்ப ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உபகரண மேம்பாடு, ஒரு பெரிய சவாலாக உள்ளது. இதற்கு தொழில்துறை, மற்றும் கல்வித்துறையின் உதவிகள் தேவை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின்படி, ஏற்கனவே தொடங்கப்பட்ட கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்களின் கீழ், முன்னுரிமை அடிப்படையில் விண்ணப் பிக்குமாறு, பொது, தனியார் கல்வி நிறுவனங்கள், பொறியியல் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினரை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement