இந்த வயது பெண்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்

அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா முதல்வராக உள்ளார். அங்கு பெண்களுக்கு உரிய வயதிற்கு முன்பு திருமணம் செய்வதையும், கருத்தரிப்பதையும் தடுக்கும் விதமாக புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளது ஆளும் பாஜக அரசு.

அதன்படி, 14 வயதுக்கு குறைவான பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் எனவும், 14-18 வயது பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் பாயும் என அசாம் அமைச்சரவை முடிவெடுத்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், கவுஹாத்தியில் நடைபெற்ற விழா ஒன்றில் முதல்வர் ஹிந்தா பிஸ்வாஸ் சர்மா பங்கேற்று பேசினார். இதில் மாநில அரசு பெண்கள் நலன் சார்ந்து எடுத்து வரும் திட்டம் குறித்து பேசினார். 18 வயதுக்கு குறைவான பெண்களுக்கு திருமணம் நடப்பதை குறைத்து தடுக்கவே அரசு புதிய சட்டங்களை இயற்றி வருகிறது. எப்படி, சிறு வயதில் கருதரிப்பது கேடான விஷயமோ, அதேபோல வயது தாண்டி குழந்தை பெற்றுக்கொள்வதும் உகந்த செயல் அல்ல.

அனைத்து விஷயங்களையும் ஒரு குறிப்பிட்ட வயதில் செய்ய வேண்டிய விதத்தில் தான் கடவுள் நமது உடலை படைத்துள்ளார். எனவே, 22 – 30 வயது காலகட்டத்தில் பெண்கள் தாய்மை அடைய வேண்டும். இந்த வயதில் இருக்கும் பெண்கள் திருமணமாகாமல் இருந்தால் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றார்.

முதல்வரின் இந்த கருத்து சர்ச்சையாக சமூக, பெண்ணிய ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருமணம் என்பது பெண்களின் தனிப்பட்ட உரிமை எனவும், இந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும், குழந்தை பெற வேண்டும் என்று பேசுவது முதல்வரின் வேலையல்ல என விமர்சித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.