புதுச்சேரியில், தன் மீது மோதுவதுபோல் பேருந்தை இயக்கியதாக கூறி தனியார் பேருந்து ஓட்டுநரை, காவலர் ஹெல்மெட்டால் தாக்கினார்.
காவலரான பழனி, சக காவலருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தனியார் பேருந்து ஒன்று அவர்கள் மீது மோதுவதுபோல் வந்ததாகவும், இதனால் இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த காவலர் பழனி, பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், பேருந்தில் ஏறிய காவலர் பழனி, ஹெல்மெட்டாலும், கைகளாளும், ஓட்டுநரை தாக்கிய காட்சி பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
தனது தவறை மறைக்கவே பேருந்து ஓட்டுநர் சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.