பொதுவாக மறக்கறிகளில் பாகற்காயை பிடிக்காதவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்.
பாகற்காய் மிகவும் கசப்பானது தான். ஆனால் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ளது.
இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்வது ஆபத்தையே தரும்.
அந்தவகையில் தற்போது அவை என்னென்ன பக்கவிளைவுகளை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
- பாகற்காய் சாறு குடிப்பது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் என்றாலும் கல்லீரலை பாதிக்கலாம். இது கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தினமும் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- கர்ப்ப காலத்தில் பாகற்காய் அதிகமாக உட்கொள்வது கருச்சிதைவை ஏற்படுத்தக் கூடும், எனவே கர்ப்பிணிகள் பாகற்காய் சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- இரத்த சர்க்கரை குறைவாக உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிடக்கூடாது. இது உங்கள் சர்க்கரை அளவை மேலும் குறைக்கலாம்.
- பாகற்காய் அதிக அளவில் சாப்பிடுவதால் இதயத்தில் ரத்த ஓட்டம் ஒரு புறமே செல்லும். இதனால் இரத்த கட்டிகள் மார்பில் உருவாகி மாரடைப்பு அல்லது பக்க வாதத்தை ஏற்படுத்துகிறது
- அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, சீறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.